பங்குச்சந்தையின் சென்செக்ஸ் தொடர் சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (09:43 IST)
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் தொடர்ந்து சரிவில் இருந்து வரும் நிலையில் இன்றும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதானி விவகாரம் காரணமாக பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதும் ஒரு சில நாட்களைத் தவிர கடந்த சில வாரங்களில் பங்குச்சந்தை மீளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. சற்றுமுன் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 57900 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை விட்டு 17,055 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தை இன்னும் சரிய வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறியுள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்