ஒரு வார மோசமான சரிவுக்கு பின் ஏற்றத்தை நோக்கி பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

Siva
திங்கள், 23 டிசம்பர் 2024 (09:44 IST)
பங்குச்சந்தை கடந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை மிக மோசமாக சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு இலட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளான பங்குச்சந்தை சென்செக்ஸ் ஐநூறு புள்ளிகள் வரை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு திருப்தியை அழைத்துள்ளது.

சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில், 536 புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்து 580 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 166 புள்ளிகள் குறைந்து 23 ஆயிரத்து 755 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், இன்போசிஸ், ஹீரோ மோட்டார், பிரிட்டானியா, அப்பல்லோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்