பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு விநியோகம் எப்போது? கூடுதல் தலைமை செயலாளர்

Siva
திங்கள், 23 டிசம்பர் 2024 (09:38 IST)
பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே பரிசு தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும் என கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகைக்கு வேட்டி சேலைகள் இலவசம் மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பார் என்றும், பொங்கல் பரிசு தொகைக்கு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்புகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்