இரண்டாவது நாளாக சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (09:42 IST)
பங்குச்சந்தை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதும் சரிவில் உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 329 புள்ளிகள் சரிந்து 81,302 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 115 புள்ளிகள் சரிந்து 24,555 என்ற அளவில் உள்ளது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்