சற்றுமுன் மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தை தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்ந்து 80,785 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 24,360 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், HCL டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருகின்றன.
அதேபோல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.