இந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் சுமார் ஒன்பது லட்சம் கோடி நஷ்டம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஐந்து நாட்களிலும் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, நேற்று மட்டும் 1100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்ததால், மிகப்பெரிய நஷ்டம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
வாரத்தின் ஐந்து நாட்களிலும் ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய சரிவை சந்தித்ததால், முதலீட்டாளர்கள் சுமார் ஒன்பது லட்சம் கோடி வரை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பங்குச்சந்தை சரிவின் காரணமாக, அதைச் சார்ந்திருந்த மியூச்சுவல் பண்டுகளின் மதிப்பும் மோசமாக சரிந்துள்ளது. இதன் காரணமாக, அதில் முதலீடு செய்தவர்களும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.