பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக மிகப்பெரிய அளவில் சரிந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு 9 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறப்படுகிறது
பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக மிக மோசமாக சரிந்து வருகிறது. இந்த சரிவு காரணமாக முதல் நாளில் 7.9 லட்சம் கோடி நஷ்டம் என்றும் இரண்டாவது நாளில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் நஷ்டம் என்றும் மொத்தத்தில் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்து உள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 825 புள்ளிகள் சரிந்து 63,219 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 250 புள்ளிகள் குறைந்து 18,870 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.