வாரத்தின் முதல் நாளே சரிவில் பங்குச்சந்தை.. இந்த வாரம் சென்செக்ஸ் எப்படி இருக்கும்?

திங்கள், 16 அக்டோபர் 2023 (10:03 IST)
இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவில் தொடங்கியதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிந்து 66159 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 25 புள்ளிகள்  சரிந்து   19,725 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும் இந்த வாரம் பங்குச்சந்தை ஏற்றத்தில் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒரு நாட்களில் பங்கு சந்தை உயரும் என்றும் பங்குச்சந்தை நிமிடங்கள் கணித்துள்ளனர்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்