முதல்முறையாக 67000ஐ தாண்டிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (09:40 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் முதல் முறையாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 67 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்து உள்ளதாக கருதப்படுகிறது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 67005 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி சுமார் 60 புள்ளிகள் உயர்ந்து 18,810 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் புதிய பங்கு சந்தை முதலீட்டாளர்களை ஈர்க்க வல்லதாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்