67000ஐ நெருங்கும் சென்செக்ஸ்.. இந்திய பங்குச்சந்தை உச்சம்..!

செவ்வாய், 18 ஜூலை 2023 (10:27 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்றும் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. 
 
இதனை அடுத்து சென்செக்ஸ் 67 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்ந்து 66 ஆயிரத்து 834 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 19775 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதே ரீதியில் போனால் இன்னும் ஒரு சில நாட்களில் 67 ஆயிரம் சென்செக்ஸ் எட்டிவிடும் என்றும் அதேபோல் ஒரு சில மாதங்களில் 70 ஆயிரத்தை எட்டி விடும் என்றும் கூறப்படுகிறது.
 
பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்