பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்.. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (10:39 IST)
பங்குச்சந்தை கடந்த வாரம் முழுவதும் கிட்டத்தட்ட உயர்ந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 160 புள்ளிகள் வரை உயர்ந்து 69 ஆயிரத்து 225 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 19 ஆயிரத்து 610 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பங்குச்சந்தை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் உள்ளது என்பதும் நல்ல லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் பங்குச்சந்தை படிப்படியாக உயர்ந்து ஒரு சில மாதங்களில் சென்செக்ஸ் 70 ஆயிரம் வரை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக பங்குச்சதை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்