இந்திய பொருட்கள் மீதான இறக்குமதிவரி 26% அதிகரிப்பு.. டிரம்ப் உத்தரவு..!

Siva

வியாழன், 3 ஏப்ரல் 2025 (07:59 IST)
இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி 26 சதவீதம் அதிகரிப்பதாக அமெரிக்க அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேலும், சீனாவுக்கு 34%, இலங்கைக்கு 44%, கம்போடியாவுக்கு 49%, மற்றும் வியட்நாமுக்கு 46% கூடுதலாக வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
இன்றைய தினம் அமெரிக்காவின் விடுதலை தினம் என்றும், அமெரிக்காவை விட பிற நாடுகளே அதிகமாக வரி வசூலிக்கின்றன என்றும், இந்த வரி உயர்வு குறித்து ட்ரம்ப் கூறியுள்ளார். 
 
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு வரியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% வரியை உயர்த்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில், இந்திய அரசு வரியை குறைத்தால், அமெரிக்க அரசும் இந்திய பொருட்களுக்கான வரியை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்