பங்குச் சந்தையில் மீண்டும் ஒரு ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (10:12 IST)
பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று மே தினம் என்பதால் பங்குச்சந்தை வர்த்தகம் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் ஆரம்பமே ஏற்றத்துடன் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 61,470 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி   வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 18,169 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றமாக வருவதும் சென்செக்ஸ் 625 நெருங்கி வருவதும் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பங்குச்சந்தை எந்த நேரத்திலும் சரிய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும் ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்