இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

Mahendran
வெள்ளி, 7 மார்ச் 2025 (18:36 IST)
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக சரிவில் இருந்த நிலையில் சமீப காலமாக உயர்ந்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் ரூ.86.92  என வர்த்தகம் முடிவடைந்தது. இன்று மாலை 5 மணிக்கு வர்த்தக முடிவடைந்த நிலையில் 20 காசுகள் உயர்ந்திருப்பது இந்திய ரூபாய்க்கு பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
 
வங்கிகளிடையே நடைபெற்ற அன்னிய செலவாணி வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 87.13 என சரிந்து, ஒரு கட்டத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 87.22  வரை சரிந்தது.
 
இந்த நிலையில் அதன்பின் திடீரென உயர்ந்து ரூபாய் 86.88  என வலுவடைந்து இறுதியில் நேற்றைய மதிப்பில் இருந்து 20 காசுகள் உயர்ந்து 86.92 என முடிவடைந்தது/
 
 நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசு சரிந்த நிலையில் இன்று 20 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்