அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுவது அனைத்து நாடுகளுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அமெரிக்க - ரஷ்ய சிறைக் கைதிகள் பரிமாற்றம் உள்பட சில முக்கிய அம்சங்கள் பேசப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, டிரம்ப் தனது நீண்ட சமூக வலைதள பதிவில், "புதினுடன் தொலைபேசியில் பேசினேன். ஆக்கபூர்வமான உரையாடலாக இருந்தது. உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலர் சக்தி உள்பட பல்வேறு விஷயங்களை பேசினோம். இரு நாடுகளின் பலன்கள் குறித்தும் உரையாடினோம். உக்ரைன் போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகுவதையும் நிறுத்த வேண்டும்" என்று புதினும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.