அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, இன்று வணிக நேர முடிவில் 15 காசுகள் குறைந்து ரூ. 87.58 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2025 தொடங்கியதிலிருந்து இந்திய ரூபாய் உள்பட ஆசிய நாடுகளின் நாணயங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் பாதிப்பை கடந்த சில நாட்களாக சந்தித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரியில் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 83.21 ஆக இருந்த நிலையில், தற்போதைய நிலைமையில் சுமார் 3% சரிவை சந்தித்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமல்படுத்தப்பட்ட வரி உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் பெரிய அளவில் வெளிநடப்பு செய்வதுதான் ந்ப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.