நேற்று பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தது என்றும், பல ஆண்டுகளுக்கு பிறகு 'Black Monday என்ற நாள் திரும்பி வந்ததாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்று பங்குச்சந்தை மோசமாக சரிந்திருந்தாலும், இன்று சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இன்று Good Tuesday என்று கூறி வருகின்றனர்.
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1200 புள்ளிகள் உயர்ந்து 74,325 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 375 புள்ளிகள் உயர்ந்து 22,509 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஏஷியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்.சி.எல் டெக்னாலஜி, எச்.டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், டி.சி.எஸ் உள்ளிட்ட சில பங்குகள் மட்டுமே சரிந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. "நேற்று பிளாக் மண்டேவாக இருந்தாலும், இன்று Good Tuesday ஆக உள்ளது" என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.