தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது..!

Siva
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (11:02 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதாகவும், ஒரு சவரன் 65 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய்   8,075 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து  ரூபாய்  64,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,809 எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,472 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்