தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கோடை காலம் ஆரம்பித்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில், இன்னும் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிப்ரவரி 25 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.