இன்று காலை குறைந்திருந்த தங்கத்தின் விலை, மாலையில் திடீரென உயர்வை கண்டுள்ளது. நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து, ரூ.11,950-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு சவரன் ரூ.2,000 குறைந்து ரூ.95,600-க்கு விற்பனையானது.
ஆனால், மாலை நேரத்தில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து, ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டிற்குள் தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்தைத் தொடும் என்ற நிபுணர்களின் எதிர்பார்ப்பை உறுதி செய்வது போல, கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
தங்கம் விலை அதிகரித்த போதிலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.