நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.97,600 என்ற புதிய உச்சத்தில் விற்பனையான நிலையில், இன்றைய விலையில் ரூ.2,000 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.95,600-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.250 குறைந்து, ரூ.11,950-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வெள்ளி விலையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்துள்ளது. கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.190-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.13000 குறைந்து வெள்ளி ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.