இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இந்தியாவின் ஆதார் டிஜிட்டல் அடையாள திட்டத்தை பாராட்டியதோடு, இங்கிலாந்து அரசு கொண்டு வரவிருக்கும் "பிரிட் கார்டு" (Brit Card) திட்டத்திற்கு முன்னோடியாக ஆதார் திட்டத்தை கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பைக்கு பயணம் மேற்கொண்ட ஸ்டார்மர், ஆதார் திட்டத்தை வடிவமைத்த நந்தன் நிலேகனியை சந்தித்து, 140 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை உள்ளடக்கிய இந்த திட்டம் குறித்து விவாதித்தார்.
இங்கிலாந்தில் இந்த டிஜிட்டல் ஐடி திட்டத்திற்கு தனியுரிமை மற்றும் அரசாங்க அதிகார அத்துமீறல் குறித்த அச்சங்கள் காரணமாக பொது எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும், ஸ்டார்மர், "பள்ளியில் சேர்க்கை போன்ற பணிகளுக்கான அடையாள சான்றுகளை தேடும் சிரமத்தை குறைக்கும் வசதிக்காக" இந்தத் திட்டம் மக்களிடம் நம்பிக்கையை பெறும் என்று நம்புவதாக கூறினார்.