நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

Siva

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (09:09 IST)
பண்டிகை கால பயணங்களுக்காக மக்கள் தயாராகி வரும் நிலையில், வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு விமான கட்டணங்கள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து புறப்படும் உள்நாட்டு விமானங்களின் கட்டணம், சாதாரண நாட்களை ஒப்பிடுகையில் சுமார் ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது. 
 
சென்னையிலிருந்து மதுரைக்கு சாதாரண நாட்களில் ரூ. 3,129 ஆக இருந்த கட்டணம், தற்போது ரூ. 17,683 வரை எட்டியுள்ளது. இதேபோல், சென்னை - தூத்துக்குடிக்கு ரூ. 3,608 லிருந்து ரூ. 17,053 வரையும் சென்னை - ஹைதராபாத்துக்கு ரூ. 2,926 லிருந்து ரூ. 15,309 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது. 
 
உள்நாட்டு பெருநகரங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கான விமான கட்டணமும் கனிசமாக உயர்ந்துள்ளது. சென்னை - மும்பைக்கான சாதாரண கட்டணம் ரூ. 3,356 ஆக இருந்த நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ. 21,960 வரை உயர்ந்துள்ளது. 
 
சென்னை - டெல்லி வழித்தடத்தில் கூட, ரூ. 5,933 லிருந்து ரூ. 30,414 வரையும், சென்னை - கொல்கத்தாவுக்கு ரூ. 5,293 லிருந்து ரூ. 22,169 வரையும் கட்டணம் அதிகரித்துள்ளது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்