நடிகர் கார்த்தி, இயக்குனர் அமீர் வீடுகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! - தொடரும் இ-மெயில் மிரட்டல்கள்!

Prasanth K

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (09:45 IST)

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலில் கார்த்தி, அமீர் வீடுகளில் வெடிக்குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபமாக சென்னையில் உள்ள தமிழக போலீஸ் டிஜிபி அலுவலகத்தின் இமெயில் முகவரி வெடிக்குண்டு மிரட்டல் மெயில்களை அனுப்பும் கூடாரமாக மாறியுள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளத்தை மறைத்து பிரபலங்களின் வீடுகளில் வெடிக்குண்டு உள்ளதாக மிரட்டல் இமெயில்கள் வருகின்றன. அவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது என்பதால் போலீஸாரும் மோப்ப நாய், வெடிக்குண்டு நிபுணர்களோடு சென்று அப்பகுதிகளை ஆராய்கின்றனர். ஆனால் அங்கு வெடிக்குண்டு எதுவும் கிடைப்பதில்லை. ஆனால் இந்த போலி மிரட்டல்களால் காவலர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது.

 

அந்த வகையில் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகர் கார்த்தியின் வீடு, பாண்டிபஜாரில் உள்ள இயக்குநர் அமீரின் வீடு ஆகியவற்றில் வெடிக்குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மெயில் வந்துள்ளது. அதை தொடர்ந்து போலீஸார் சென்று சோதனை நடத்தியதில் அங்கு வெடிக்குண்டு எதுவும் கண்டறியப்படவில்ல. தொடர்ந்து இதுபோன்று மிரட்டல் மெயில்களை அனுப்பவது யார் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்