ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

Siva

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (09:15 IST)
சென்னையில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ஓபிஎஸ்-ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் உடனிருந்தார்.
 
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றது.
 
ஓ.பி.ரவீந்திரநாத், இந்த சந்திப்பின் புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், "இன்று தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு நாயகனும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும், திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களையும், மதிப்பிற்குரிய தமிழக முன்னாள் முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைந்து நேரில் சந்தித்து, தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களின் ஆசிகளைப் பெற்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவும் வேளையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது புதிய கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்