சாம்சங் கேலக்ஸி நோட் 9 குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் மற்றும் அம்சங்கள், புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
# கேலக்ஸி நோட் 8 போன்றே நோட் 9 ஸ்மார்ட்போனும் செவ்வக வடிவில் பிளாக் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
# எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம்.
# இதன் கேமரா சென்சார்கள் கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றும், 4000 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டிருக்கலாம்.
# அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படலாம் மேலும், மேம்படுத்தப்பட்ட எஸ் பென், மியூசிக் பிளேபேக் கன்ட்ரோல், செல்பி டைமர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி நோட் 9 மாடல் ஆகஸ்டு 9 ஆம் தேதி வெளியிட இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.