மோடியின் வெற்றியை அடுத்து இணையதளத்தில் மோடி மக்களிடம் தன்னை எதற்காக வெற்றி பெற வைத்தீர்கள் எனக் கேட்பது போன்ற பதிவு வைரலாகப் பரவி வருகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலைப் பெற்று தனிப்பெரும்பாண்மையாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிப் பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்புக்கட்சிகளான மாநிலக் கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நீக்கம் என பாஜக ஆட்சியின் தோல்வி திட்டங்கள் மீதும் மக்கள் அதிருப்தியில் இருந்தும் பாஜக தனிப்பெரும்பாண்மையாக ஆட்சி அமைத்து இருப்பது இந்தியா முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து பாஜகவின் வெற்றியைப் பார்த்து மோடியே மக்களிடம் எதனால் எங்களை வெற்றிப்பெற வைத்தீர்கள் கேட்பது போல் பதிவு ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.