முன்னாள் பங்களாதேஷ் அதிபர் ஷேக் ஹசீனா 2024 ஆகஸ்ட் 5ஆம் தேதி பங்களாதேஷில் இருந்து வெளியேறிய பிறகு, பங்களாதேஷ் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாக உள்ளது. ஆனாலும் பங்களாதேஷ் ராணுவ தளபதி ஜெனரல் வாக்கார் உஸ் ஸமான் இடையே அதிகாரப் போட்டியின் மையமாக மாறியுள்ளது.
பல ஊடகத் தகவல்கள், பங்களாதேஷில் இன்னும் புரட்சி நிகழும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளன. எனினும், தற்போது வரை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியை தொடர்கிறது.
இந்நிலையில், பங்களாதேஷ் ராணுவ தளபதி ஜெனரல் வாக்கார் உஸ் ஸமான் ரஷ்யாவுக்கு சென்றுள்ள நிகழ்வு, உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெனரல் வாக்கார் உஸ் ஸமான், 2025 ஏப்ரல் 7ஆம் தேதி ரஷ்யாவுக்கு சென்று, அந்நாட்டு பாதுகாப்புத் துணை அமைச்சர் ஜெனரல் போமின், ரஷ்ய ராணுவ தளபதி ஜெனரல் ஒலெக் சால்யுகோவ் மற்றும் ரோஸ்டெக், ரோசோபொரோனெக்ஸ்போர்ட், ரோசாடோம் உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆனால் அவருடைய இந்த விசிட் பங்களாதேஷ் ராணுவம், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை மாற்றி, தங்களே நாட்டை வழிநடத்த தயாராக இருப்பதைக் குறிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் அவர் பங்களாதேஷ், இந்தியாவின் நட்பு நாடு என்றும் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.