இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

Mahendran

செவ்வாய், 20 மே 2025 (17:46 IST)
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை தற்போது வங்கதேசத்தில் தொடங்கியுள்ளது.
 
இது குறித்து, வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் அவர்களின் தனிப்பட்ட உதவியாளர் பைஸ் அகமது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
 
இணைய பயன்பாட்டுக்காக, ஸ்டார்லிங்க் ரெசிடென்ஸ் மற்றும் ஸ்டார்லிங்க் ரெசிடென்ஸ் லைட் என இரண்டு வகையான மாதச்சந்தா திட்டங்கள் அறிமுகமாகியுள்ளது. இந்த சேவையின் மூலம், அதிகபட்சம் 300 Mbps வரை இணைய வேகம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 9 ஆம் தேதி சோதனை ஓட்டமாக அறிமுகமான ஸ்டார்லிங்க் சேவை, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
 
இதற்குமுன், பிப்ரவரி 19ஆம் தேதி எலான் மஸ்க்கை தொடர்பு கொண்டு, வங்கதேசத்தில் இந்த சேவையை தொடங்குமாறு முகமது யூனுஸ் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவிலும் ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகப்படுத்த முயற்சி நடைபெற்றது. ஆனால், இந்திய அரசின் டிஜிட்டல் நெட்வொர்க் கொள்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால்,  இந்தியாவின் ஸ்டார்லிங் சேவையின் அறிமுகம் தாமதமாகி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்