ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

வியாழன், 23 மே 2019 (18:51 IST)
மக்களவை தேர்தலுடன் இந்தியாவின் பல சட்டசபை பகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. ஆனால் அதில் ஆந்திரா மட்டும் வித்தியாசம். ஒட்டுமொத்த 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 176 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
இதில் 150 இடங்களில் வென்று ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து ஆளும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்