ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கசிய விட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹரியானா மாநில உள்துறை செயலாளர் சுனிதா மிஸ்ரா இது குறித்து கூறிய போது, "அனைத்து YouTube சேனல்களும் கண்காணிக்கப்படும்" என்றும், "சில சந்தேகப்படும் வகையான YouTube சேனல்களின் மீது விசாரணை நடத்தப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோதி மல்கோத்ரா பங்களாதேஷ், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், குறிப்பாக பாகிஸ்தான்–பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் அவர் சில தொடர்புகளை வைத்துள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்றும் கூறினார்.