படத்தில் ஆபாசப் பாடல் வைத்தது ஏன்? விளக்கமளித்த இயக்குநர்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (16:42 IST)
ஆபாசப் பாடலை எதற்கு வைத்தோம் என்று அம்சமான பதில் ஒன்றைக் கூறியிருக்கிறார் மூன்று ஏ படத்தின் இயக்குநர்.


 

 
முதல் படத்தையே ஆபாச பட ரேஞ்சுக்கு எடுத்தவர் இந்த இயக்குநர். அந்தப் படத்துக்கு ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் கிடைத்தது. அடுத்த படத்தை, ‘பீப்’ சாங் புகழ் வம்பு நடிகரை வைத்து எடுத்திருக்கிறார். இரண்டு பேரும் சேர்ந்துள்ள இந்தப் படத்தின் தலைப்பிலேயே மூன்று ‘ஏ’ இருக்கிறது. ஆனால், படத்தில் அப்படி எதுவும் இல்லை என்கிறார்கள்.
 
பின்னர் எதற்கு சென்சார் போட்டு யு/ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்ததாம்? அஸ்வின் தாத்தா கேரக்டரில் நடித்திருக்கும் வம்புவும், தகதக நடிகையும் சேர்ந்து செக்ஸியான ஆட்டத்தைப் போட்டிருக்கிறார்கள். ஏன் இந்த செக்ஸி ஆட்டம்? என்று இயக்குநரிடம் கேட்டால், ‘இளைஞர்களைவிட வயதானவர்களுக்குத்தான் மனசு அதிகமாக அலைபாயும். அந்த கோணத்தில்தான் கவர்ச்சியைத் தூக்கலாக வைத்தோம்” என்று பதில் சொல்கிறார்.
 
அடுத்த கட்டுரையில்