மறுபடியும் ‘அந்த’ மாதிரி படமா?

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (21:16 IST)
‘அந்த’ மாதிரி படமெடுத்த இயக்குநரும், அந்தப் படத்தில் நடித்த நடிகரும் மீண்டும் இணைவதால், இதுவும் ‘அந்த’ மாதிரி படமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


 
 
இரண்டு நம்பர் நடிகைகளின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட படம், முழுவதும் இரட்டை அர்த்த வசனங்களால் நிரம்பி இருந்தது. இதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், படம் நல்ல வசூலை பெற்றுத் தந்தது.
 
பொதுவாக, ஒரு படம் நன்றாக ஓடினால், அதன் இரண்டாம் பாகம் எடுப்பதுதானே நடைமுறை? ஆனால், படத்துக்கு எழுந்த எதிர்ப்பால், அந்த நடைமுறையைக் கைவிட்டு விட்டனர்.
 
இந்நிலையில், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் நேரடியாகவே ‘அந்த’ மாதிரி பேசக்கூடிய படம் வெளியானது. ஆனால், ஒருவர் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்தப் படத்தின் ஹீரோவும், இயக்குநரும் அதேமாதிரி இன்னொரு படத்தை இப்போது எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
 
எனவே, நாமும் இரண்டாம் பாகம் எடுத்தால் என்ன என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் இயக்குநரும், இசையமைப்பாளரான நடிகரும். இயக்குநரின் இரண்டாவது படம் வேறு ஊத்திக் கொண்டதால், ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்