பாகுபலி, பாகுபலி-2 உள்ளிட்ட பல படங்களில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி போட்ட அனுஷ்காவுடன்காதல் உருவானதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் எனவும் செய்திகள் பரவின. இன்று வரை அந்த செய்தி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தெலுங்கில் தயாராகி தமிழ், ஹிந்தி என டப் செய்யப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்ற படம் பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை விட, ரசிகைகள்தான் அதிகம். அவர் கூட ஒரு பேட்டியில் பாகுபலி படத்திற்கு பிறகு தனக்கு 6000க்கும் அதிகமாக வரன்கள் வந்ததாக கூறினார்.