சின்ன நம்பர் நடிகையை சமாதானப்படுத்திய நடிகர்

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (20:41 IST)
படத்தில் இருந்து விலகிய சின்ன நம்பர் நடிகையை, நடிகர் சமாதானப்படுத்தி விட்டார் என்கிறார்கள்.


 
 
இரண்டெழுத்து இயக்குநர் இயக்கிய இரண்டெழுத்து படம் இது. சீயான் நடிகரும், சின்ன நம்பர் நடிகையும் இதில் நடித்திருந்தனர். பல வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், சின்ன நம்பர் நடிகையுடன் சேர்த்து இன்னொரு ஹீரோயினையும் கதைக்குள் கொண்டு வந்துள்ளார் இயக்குநர்.
 
ஆனால், சின்ன நம்பர் நடிகையைவிட அந்த நடிகைக்குத்தான் கதையில் ஸ்கோப் இருக்கிறதாம். இது தெரிந்ததும் படத்தில் இருந்து விலகிவிட்டார் சின்ன நம்பர் நடிகை. தன் மகளின் கல்யாண வேலைகளில் பிஸியாக இருந்ததால், சீயான் நடிகருக்கு இதில் கவனம் செலுத்த முடியவில்லையாம். தற்போது சின்ன நம்பர் நடிகையின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று சமாதானப்படுத்தியிருக்கிறாராம். விரைவில் மீண்டும் படத்தில் இணைவார் சின்ன நம்பர் நடிகை என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்