செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தற்போது 30 மற்றும் 90 நாட்களுக்கான அதிக டேட்டாவுடன் கூடிய புதிய ப்ளான்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் அதிகமாக பயன்படுத்தும் செல்போன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ உள்ளது. ஜியோவில் தினசரி 1ஜிபி, 1.5 ஜி.பி, 2 ஜி.பி மற்றும் 3 ஜி.பி டேட்டாக்களுடன் கூடிய அன்லிமிடட் கால்கள் கூடிய ப்ளான்கள் ஏராளமாக உள்ளன. இதுதவிர வருடாந்திர ப்ளான்களும் உள்ளன. ப்ளான் வேலிடிட்டி பொருத்து அதன் ரீசார்ஜ் விலைகளும் மாறுபடுகின்றன.
இந்நிலையில் தற்போது ஜியோ தினசரி 2.5 ஜி.பி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்கள் கொண்ட புதிய இரண்டு ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
ரூ.349 ப்ளான் – தினசரி 2.5 ஜி.பி டேட்டா, அன்லிமிட்டட் கால்கள், 100 எஸ்.எம்.எஸ்/தினசரி, வேலிடிட்டி 30 நாட்கள்
ரூ.899 ப்ளான் - தினசரி 2.5 ஜி.பி டேட்டா, அன்லிமிட்டட் கால்கள், 100 எஸ்.எம்.எஸ்/தினசரி, வேலிடிட்டி 90 நாட்கள்
இந்த ரீசார்ஜ் ப்ளான்களோடு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சாவ்ன் உள்ளிட்ட பல ஜியோவின் செயலிகளுக்கான பயன்பாட்டு அனுமதியும் இலவசமாக வழங்கப்படுகிறது.