1.3 கோடி வாடிக்கையாளர்களை ஒரே மாதத்தில் இழந்த ஜியோ!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (18:04 IST)
ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிட்டதட்ட 1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தகவல். 

 
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் சேவைகளில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்குகளாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. சமீபத்தில் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களது ரீசார்ஜ் ப்ளான்களின் கட்டணத்தை 20 முதல் 25% வரை உயர்த்தின.
 
இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிட்டதட்ட 1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக ட்ராய் அமைப்பு அறிவித்துள்ளது. வோடஃபோன் - ஐடியா நிறுவனம் கடந்த டிசம்பரில் 16 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதே மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாம்.  ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை ஏற்றியதே வாடிக்கையாளர் இழப்புக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்