ஃபுல் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் அசத்தலான ஆப்ஷனில் வெளியான Realme GT 6T! ஆப்ஷன்ஸ் எப்படி இருக்கு?

Raj Kumar
புதன், 22 மே 2024 (16:23 IST)
இந்தியாவிலேயே முதன் முதலாக ஸ்னாப்ட்ராகன் 7 ப்ரோசசர் ஜென் 3 யில் வெளியாகும் ஸ்மார்ட் போனாக Realme GT 6T மொபைல் உள்ளது. மொபைல் மார்க்கெட்டில் இருக்கும் போட்டிகளை ஈடுக்கட்டும் வகையில் இந்த மொபைலின் திறன்கள் இருக்கிறதா என பார்க்கலாம்.



Realme GT 6T சிறப்பு அம்சங்கள்:

•           நல்ல திறன் வாய்ந்த ஸ்னாப்ட்ராகன் 7 ஜென் 3 ப்ராசசரை கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளதால் கேமிங் மற்றும் மல்டி டாஸ்கிங்கில் எந்த பிரச்சனையும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

•           5ஜி மொபைலான இதில் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி என இருவகையான ரேம் கொண்ட வெர்சன்கள் உள்ளன. அதே போல நினைவகத்தை பொறுத்தவரை 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி என மூன்று வகைகளில் இந்த மொபைல் வெளியாகியிருக்கிறது.

•           பொதுவாக இருக்கும் ஃபுல் ஹெச்டி மொபைல் போன்களை விட ஒரு படி மேலே சென்று 1264 x 2780 பிக்சல் அளவில் ஹெச் டி ப்ளஸ் டிஸ்ப்ளே 120 ஹெட்ஸ் ரிஃப்ரஸ் ரேட்டிங்கில் இருப்பதால் டிஸ்ப்ளே மற்ற போன்களை விட சிறப்பாக இருக்கிறது. மேலும் 6000 நிட்ஸ் ப்ரைட்னஸ் இருப்பதால் நல்ல வெயிலிலும் கூட எளிதாக இந்த போனை பயன்படுத்த முடியும்.



•           கேமிராவை பொறுத்தவரை பின்பக்க கேமிராவாக 50 எம்.பி சோனி எல்.ஒய்.டி 600 சென்சார் கொண்ட சிறப்பான கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் முன்பக்கம் 8 எம்.பி அல்ட்ரா வொய்ட் கேமிரா செல்ஃபிக்கு ஓ.கேவாக இருக்கும் அளவில்தான் உள்ளது.

•           5500 எம்.ஏ.ஹெச் பேட்டரியுடன் இந்த மொபைல் வருகிறது. பொதுவாக 6000 எம்.ஏ.ஹெச்சில் மொபைல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும் 120வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் இருப்பதால் 10 நிமிடத்திலேயே 50 சதவீதம் சார்ஜ் ஏறிவிடும் திறன் இதற்கு உண்டு.

•           யு.எஸ்.பி டைஃப் சி சார்ஜிங் போர்ட்டோடு வரும் இந்த மொபைல் துவக்க விலையாக 24,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

•           Fluid silver மற்றும் Razor green ஆகிய இரண்டு நிறங்களில் வருகிற மே 29 ஆம் தேதி சந்தைக்கு வரும் இந்த மொபைலின் துவக்கவிலை 30,999 ஆக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்