விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

Mahendran

புதன், 22 மே 2024 (14:07 IST)
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் அதிக மொபைல் ஃபோன்களை விற்ற நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ள விவோ நிறுவனம் தற்போது புதிய மாடல் மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில் இந்த மொபைல் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
சிறப்பு அம்சங்கள்
 
6.78 இன்ச் அமோட் டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்
ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ்
 65 மெகாபிக்சல் அம்சம் கொண்ட 2 பின்புற கேமிரா 
16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்பி கேமரா
5,000mAh பேட்டரி
44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
 
 
இரண்டு வண்ணங்களில் இந்த போன் இந்தியாவில் வெளிவந்துள்ள நிலையில் இதன் விலை ரூ.24,999 எனவும், குறிப்பிட்ட சில வங்கிகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் விலையில் சலுகைகளை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்