18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

Raj Kumar

செவ்வாய், 21 மே 2024 (10:57 IST)
5ஜி தொழில்நுட்பம் வந்த காலம் முதலே 5ஜி மொபைல்களை வெளியிடுவதில் மொபைல் நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதிலும் குறைந்த விலையில் அதிக தொழில்நுட்பம் கொண்ட மொபைலை வெளியிடுவதுதான் மொபைல் நிறுவனங்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.



அந்த வகையில் 8ஜிபி ரேம், 50எம்.பி சோனி கேமிரா என அசத்தலான அம்சங்களுடன் வெளியாக இருக்கிறது Vivo Y200GT

விவோ Y200GT அம்சங்கள்:

இந்த மொபைல் 1080 x 2408 பிக்சல்ஸ் ரெசோலூஷன் கொண்ட டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் 120hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளதால் கேமிங் வசதிக்காக வாங்குவோருக்கும் தடையில்லாமல் விளையாட உதவும்.

ஆண்டிராய் 14 ஓ.எஸ் மற்றும் ஆர்ஜின் ஒ.எஸ் 4 யூசர் இண்டர்ஃபேஸை கொண்டுள்ளது இந்த மொபைல். ப்ராசசரை பொறுத்தவரை ஸ்னாப் ட்ராகன் 7 ஜென் 3 ஆக்டா கோர் ப்ராசசர் இருப்பதால் மல்டி ப்ராசசிங் மாதிரியான விஷயங்களுக்கு கூட இந்த மொபைல் தொய்வில்லாமல் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமிரா வசதியில்தான் அசத்தலாக சோனியின் எல்.ஒய்.டி 600 ஐ சேர்ந்த 50 பிக்சல்ஸ் பின்பக்க கேமிரா அமைக்கப்பட்டுள்ளது. மற்ற கேமிராக்களுடன் ஒப்பிடும்போது இது திறன் வாய்ந்த கேமிராவாக இருக்கிறது. மேலும் வைட் ஆங்கிள் போட்டோகிராபிக்காக 2 எம்.பி கொண்ட இன்னொரு கேமிராவும் உள்ளது. 16 எம்.பி ஃபுல் ஹெச்.டி முன்பக்க கேமிரா கொடுக்கப்பட்டுள்ளது.



மெமரியை பொறுத்தவரை 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி ஆகிய மூன்று வகைகளில் இந்த மொபைல் வருகிறது. 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் அம்சங்களை கொண்டுள்ளது விவோ Y200GT.

6000 mAh பேட்டரி அம்சத்தையும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்சனையும் இந்த மொபைல் கொண்டுள்ளது. சார்ஜிங் போர்ட்டாக யு.எஸ்.பி டைப் சி 2.0 போர்ட் வைக்கப்பட்டுள்ளதால் இதை ஓ.டி.ஜியாக பயன்படுத்தும்போது ஃபைல் ட்ரான்ஸ்ஃபர் வேகம் அதிகமாகவே இருக்கும்.

சென்சார் அமைப்புகளை பொறுத்தவரை வழக்கம் போல ஃபிங்கர் ப்ரிண்ட் (பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது), எக்சலரோமீட்டர், ப்ராக்சி, கைரோ, காம்பஸ் ஆகிய சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட விலையாக 18,415 ரூபாய்க்கு இந்த மொபைல் வெளியாக இருக்கிறது.

சீன மார்க்கெட்டில் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த மொபைல் சில வாரங்களில் இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்