வாடிக்கையாளர்கள் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என்று பேடிஎம் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை வழங்கி வரும் பிரபல பேடிஎம் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை பேடிஎம் நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளது என்று பேடிஎம் உறுதி அளித்துள்ளது. இதே போன்று ஏற்கனவே ஓலா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைத்து டிஜிட்டல் முறையில் மாறி வரும் நிலையில் தகவல்கள் பாதுகாப்பு குறித்த கவலை தொடர்ந்து மக்களிடத்தில் பெரும் கேள்வியாக உள்ளது.