ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி ஹவுஸ் ஆப் தி டிராகன் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
கேம் ஆஃப் த்ரோன்ஸின் முன் தொடரான ஹவுஸ் ஆஃப் தி டிராகன், HBO சேனலக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. இப்போது சீசன் 1 முடிந்துவிட்டதால், சீசன் 2க்கான காத்திருப்பு அதிகரித்துள்ளது. இந்த காத்திருப்பை இன்னும் தூண்டும் வகையில் சிறப்பு பதிப்பான Oppo Reno 8 Pro ஹவுஸ் ஆப் தி டிராகன் அறிமுகமாகவுள்ளது.
"ஹவுஸ் ஆஃப் தி டிராகன் லிமிடெட் எடிஷன் செட்" ஹவுஸ் தர்காரியனின் சின்னங்களில் மூழ்கியுள்ளது. அறிமுகமாகும் Oppo Reno8 House of the Dragon Limited Edition Set இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. ப்ரீ புக்கிங் இருக்கும் நிலையில் இன்னும் இதன் விலை குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. தீபாவளிக்க்கு அறிமுகமாகக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் வித்தியாசமாக பெட்டியில் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. லிமிடெட் எடிஷன் மாடல் என்பதால் ஸ்மார்ட்போனுடன் மேலும் சில பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன் விவ்ரம் பின்வருமாறு…
# ஹவுஸ் டர்கேரியன் போன் கவர்
# டிராகன் முட்டை
# டிராகன் சிம் எஜெக்ட் பின்
# டிராகன் சின்னம் தொலைபேசி வைத்திருப்பவர்
# தர்காரியன் சிகில் முக்கிய சங்கிலி
# ஹவுஸ் ஆஃப் ஃபயர் அண்ட் ப்ளட்க்குள் உங்களை வரவேற்கும் வகையில் கிங் விசெரிஸ் I தர்காரியனின் கையால் எழுதப்பட்ட பிரகடனம்.