40 லட்சம் செலவில் Tower Clock.. கடிகாரம் ஓடல.. சரிசெய்ய வழியும் இல்ல! - கலாய் வாங்கிய பீகார் ஸ்மார்ட்சிட்டி!

Prasanth Karthick

புதன், 9 ஏப்ரல் 2025 (09:35 IST)

பீகாரில் சமீபத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட க்ளாக் டவர் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

 

பீகாரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல பகுதிகள் நவீனமயமாக்கப்பட்டு வரும் நிலையில் பீகார் ஷரிப் என்ற சாலை சந்திப்பில் கடிகார கோபுரம் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது.

 

ஆனால் அந்த டவர் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு பார்த்தால் இதுதான் அந்த 40 லட்ச ரூபாய் டவரா என்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உள்ளே ஏறி செல்ல படிகள் கூட இல்லாமல் உருளை தூண் மீது கனசதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ள அந்த டவரில் நாலாப்பக்கமும் கடிகாரத்தை மாட்டியுள்ளார்கள். அந்த கடிகாரமும் அந்த கோபுரத்தை திறப்பு செய்த 24 மணி நேரத்திற்கு பிறகு நின்றுவிட்டது.

 

தற்போதைய காலக்கட்டத்தில் எல்லாரும் வாட்ச், செல்போனிலேயே மணி பார்த்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் எதற்காக இந்த மணிக்கூண்டு என்ற கேள்வி ஒருபக்கம். அதுமட்டுமல்லாமல் ரூ.40 லட்சத்திற்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த அதிசய கடிகார கோபுரம் தங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்