வாட்ஸ் அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம் - ஃபேஸ்புக் நிறுவனர் அதிரடி

Webdunia
புதன், 1 மே 2019 (19:43 IST)
ஃபேஸ்புக் நிறுவனம் பலகோடி பயனாளர்களை கொண்டுள்ளது. அதன் மற்றொரு நிறுவனமான வாட்ஸ் அப் மூலமாகவும் பல கோடி பயனாளர்கள் உள்ளனர்.
தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் தன் பயனாளர்களுக்கு பல தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் எஃப்-8 தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தரங்கில் உரையாற்றுகையில் சில முக்கியமான உறுதிமொழிகளை மார்க் அறிவித்தார்.அதில் பயனாளர்களின் தகவல் அதிமுக்கியமாக பாதுகாப்படும். மெசேஞ்சர் மூலமாக அனுப்பப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டும் தெரியும் வகையில் பாதுக்காக்கப்படும்.
 
இந்த தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தினராலும் பார்க்கமுடியாத வகையில் மேம்படுத்தப்படும். மேலும் ஃபேஸ்புக் - வாட்ஸ் அப்புடன் இணைக்கப்படும். இந்தியாவிற்குள் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
 
அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் தற்போது போட்டோ பதிவுகள் அதிகளவில் பதிவுசெய்யப்படுகின்றன. இனி இதில் எழுத்துவடிவிலான பதிவுகளை இடம்பெறவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்