234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தயார்! ரஜினியின் மெகா திட்டம்

Webdunia
புதன், 1 மே 2019 (19:23 IST)
நடைபெற்று முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தல் என மொத்தம் 22 தொகுதிகள் இடைத்தேர்தலில் அதிமுக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். அதேபோல் திமுக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியை கைப்பற்ற முடியும். இந்த இரண்டுமே நடக்க வாய்ப்பில்லை என்றுதான் கருத்துக்கணிப்புகளும், அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 
 
இந்த நிலையில் தமிழ்கத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலை ஏற்பட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் எப்போதும் வந்தாலும் சந்திக்க தயார் என்று சமீபத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் கட்சி ஆரம்பிக்கும் அறிவிப்பை மட்டுமின்றி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது
 
ஆம், ரஜினிகாந்த் இப்போதே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாகவும், அவர் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி கசிந்ததில் இருந்து ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்