சாலையில் அழுத சிறுமியின் படத்துக்கு ' உலக விருது’ ! என்ன ஆச்சர்யம் ?

வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (19:02 IST)
அமெரிக்காவில் உள்ள புகைப்படக்கலைஞர்களின் ஆகச்சிறந்த ஆசை என்னவென்றால் உலக பத்திரிக்கை புகைப்பட விருதினைப் பெறுவதுதான்.
இந்நிலையில் அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில்  ஒரு சிறுமி அழுது கொண்டிருக்கிற புகைப்படமானது உலக பத்திரிக்கை புகைப்பட விருது பெற்றுள்ளது.
 
அதாவது, கடந்த வருடம் ஜுன் மாதம் 12 ஆம்தேதி,மெக்ஸிகோ அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள்  சிலரைக் கைது செய்யப்பட்டனர்.
 
எனவே கைதான ஒரு பெண் தன் மகளை அங்கேயே விட்டுவிட்டு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 
அதன் பின்னர் அக்குழந்தை இரவு நெடுநேரம் அதே இடத்தில் நின்று கொண்டு அழுதது. இக்காட்சியை அந்நாட்டு புகைப்பட கலைஞர் ஜான் தன் கேமராவில் படமாக்கினார்.
 
உலகெங்கிலுமிருந்து சுமார் 4738 கலைஞர்கள் தாங்கள் எடுத்திருந்த 78.801 போட்டோக்களை உலக பத்திரிக்கை புகைப்பட விருதுக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதில் ஜான் எடுத்த சிறுமி யனீலா அழுவது போன்றுள்ள இப்புகைப்படம் உலக பத்திரிக்கை புகைப்பட விருதை வென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்