அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த கூகிள் பிக்ஸல்4ஏ! – மன்னிப்பு கேட்ட கூகிள்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (14:03 IST)
கூகிள் நிறுவனத்தில் புத்தம் புதிய மாடலான பிக்ஸல் 4ஏ மொபைல் விற்பனை தொடங்கி உடனே விற்று தீர்ந்த நிலையில் கூகிள் கஸ்டமர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

கூகிள் நிறுவனத்தின் பிக்ஸல் மாடல் மொபைல்களில் புத்தம் புதிதாக அறிமுகமாகியுள்ள மாடல் பிக்ஸல் 4ஏ. 128 ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகமாகியுள்ள இந்த மொபைலின் விலை ரூ.29,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் ப்ளாஷ் சேல் மூலமாக நேற்று நள்ளிரவில் விற்பனைக்கு வந்த பிக்ஸல் ஏ மொபைல்கள் விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்திற்குள்ளாக விற்று தீர்ந்தன.

இதனால் பலர் இந்த மாடல் மொபைலை வாங்க முயற்சித்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ப்ளாஷ் சேல் விற்பனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கூகிள் நிறுவனம் உடனடியாக மொபைல்கள் விற்று தீர்ந்தது குறித்து மகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளது. மேலும் மொபைல் வாங்க முடியாமல் போனவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள கூகிள் விரைவில் மேலும் சில மொபைல்கள் ப்ளாஷ் சேல் மூலமாக விற்பனைக்கு வர உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்