வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

Mahendran

திங்கள், 21 ஜூலை 2025 (13:37 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது மகனுக்காக கட்சியை அடகு வைத்துவிட்டதாக அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். நாஞ்சில் சம்பத்தின் இந்த அதிரடி கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாஜகவுடன் மதிமுக கூட்டணி அமைத்துவிட்டதாக கூறிய நாஞ்சில் சம்பத்  "வைகோ பாஜகவிடம் விலை போய்விட்டார் என்றும், தனது மகன் துரை வைகோவுக்கு மத்திய மந்திரி பதவி மற்றும் 12 சீட்டுகள் என பாஜகவுடன் பேசி முடித்துவிட்டார் என்றும், மகனின் மத்திய அமைச்சர் பதவிக்காக மதிமுகவை அவர் அடகு வைத்துவிட்டார்" என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
 
வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்று கூறிய நாஞ்சில் சம்பத், கட்சிக்காக உழைத்தவர்களை விட மகன் தான் முக்கியம் என வைகோ முடிவெடுத்துவிட்டார். அவருடைய சுயநலத்தால் மதிமுகவிலிருந்து எல்லோரும் வெளியேறி வருகிறார்கள். மதிமுகவில் இருப்பவர்களை மொத்தமாக 2 மினிபஸ்களில் ஏற்றிவிடலாம்" என்றும் கிண்டலாக கூறினார். "
 
மதிமுக எம்.எல்.ஏ. பூமிநாதன் விரைவில் திமுகவுக்கு சென்றுவிடுவார் என்றும், வைகோ மதிமுகவுக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார். வைகோவின் தவறான முடிவுகளால், மீதமிருக்கும் மதிமுகவினரும் திமுகவை நோக்கி சென்றுவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்