கேமராவில் ஏற்பட்ட சின்ன கோளாறு; 7 லட்சம் வாகனங்களை திரும்ப பெறும் ஃபோர்டு!

வியாழன், 1 அக்டோபர் 2020 (14:51 IST)
கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஃபோர்டு நிறுவனம் தனது 7 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

உலகின் கார் உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஃபோர்டின் எஃப் சிரிஸ் ட்ரக், மஸ்டாங், ஸ்ப்லோரர் போன்ற ரக கார்கள் அமெரிக்காவில் பிரபலமாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் அமெரிக்க நெடுஞ்சாலை மற்றும் பாதுகாப்பு துறைக்கு அளித்துள்ள தகவலின்படி காரின் பின்புறத்தில் அமைக்கப்பட்ட கேமராவில் மின்சாதன கோளாறு ஏற்பட்டுள்ளதால் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ரக கார்களை வாங்கியிருப்பவர்களுக்கு கார் ஷோ ரூம்கள் வழியாக கோளாறை இலவசமாக சரி செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்