கூகுளில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி: சுந்தர் பிச்சை அறிவிப்பு!

வியாழன், 1 அக்டோபர் 2020 (20:04 IST)
இணையதள உலகில் பல்வேறு புரட்சிகளை செய்து வரும் கூகுள் நிறுவனம் அடுத்த அதிரடியாக கூகுளில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி கொடுக்க இருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
உலகிலேயே இணையதள உலகில் கூகுள் நிறுவனம் நம்பர் ஒன் நிறுவனமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதன் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை பதவியேற்றதிலிருந்து அந்நிறுவனத்தின் வளர்ச்சி பிரமாண்டமாக உள்ளது 
 
இந்த நிலையில் கூகுளில் செய்தி வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப் போவதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செய்திகளை வாங்கி வெளியிட சுமார் 7,400 கோடி ரூபாய் செலவிடவிருப்பதாக சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான பதிப்பாளர்கள் பலன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்